ஒரு பாட்டுக்கு ஆட ராஷ்மிகா கேட்ட சம்பளம்! இத்தனை கோடியா? அனைவரும் ஷாக்
புஷ்பா வெற்றிக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்த்து நிற்கிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர் ஒரு பாட்டுக்கு ஆட கேட்ட சம்பளம் அனைவரையும் அதிர வைத்து இருக்கிறது.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தற்போது ஹிந்தியிலும் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. புஷ்பா அடுத்த பாகத்திலும் ராஷ்மிகா நடிக்க இருக்கிறார்.
மேலும் அவர் அடிக்கடி பல முன்னணி ஹிந்தி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு செல்லும் புகைப்படங்களும் வைரல் ஆகின்றன. அவர் ஹிந்தியில் விரைவில் அதிகம் பிஸியான நடிகையாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பாட்டுக்கு சம்பளம்
அர்ஜுன் ரெட்டி பட புகழ் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட ராஷ்மிகாவை கேட்டிருக்கின்றனர்.
அதற்காக அவர் 2 கோடி ருபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
சமந்தா 'ஊ சொல்றியா மாமா' பாட்டுக்கு 5 கோடி ருபாய் சம்பளம் பெற்றார் என டோலிவுட்டில் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வலிமை படம் போல RRR படமும் ஆகிவிடுமா ! என்ன காரணம் தெரியுமா?
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri