மீண்டும் சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளாராம்.

தென்னிந்தியாவில் நடித்த படங்களில் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட்டில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சில நாட்களுக்கு செய்திகள் வெளிவந்தன.
திடீரென உயர்ந்த சம்பளம்
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது சம்பளத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா உயர்த்தியுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளாராம் ராஷ்மிகா. இதனால், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.