நான் எதை செய்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம்- ராஷ்மிகா ஓபன் டாக்
ராஷ்மிகா-விஜய்
வெள்ளித்திரையில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதாவது கியூட்டான ஜோடியாக அமைந்தால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படி சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா என பிரபலங்கள் சிலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.
அப்படி இப்போது வெள்ளித்திரையில் இந்த ஜோடி நிஜத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.
நடிகையின் பேட்டி
இப்படி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பற்றி நிறைய செய்திகள் உலா வர நடிகை அண்மையில் ஓரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன்.
நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் இல்லை, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் முக்கிய நபராக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
