நாடாளுமன்றத்தில் திரையிடப்படும் ராஷ்மிகாவின் 'சாவா' படம்.. வெளிவந்த அதிரடி தகவல்
ராஷ்மிகா மந்தனா
அனிமல், புஷ்பா 2 போன்று ரூ. 1000 கோடி வசூல் படங்களை கொடுத்த ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் வெளியான படம் சாவா.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் ஹிந்தியில் உருவாகி இருந்தது.

பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.
ரூ. 130 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதிரடி தகவல்
இந்நிலையில், இன்று (27-ந் தேதி) நாடாளுமன்றத்தில் சாவா படத்தை சிறப்புக் காட்சியாக திரையிடப்படுகின்றனர் . அதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா என பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri