தளபதி 66 படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா! அன்சீன் புகைப்படம்..
ராஷ்மிகாவின் தந்தை
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் முலம் பிரபலமாகி இருக்கிறார்.
தெலுங்கு, கன்னடம் என பிரபலமாக இருந்த ராஷ்மிகா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் முலம் அதன்பின் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.
ஆனால் தற்போது தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா, அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
விஜய்யின் திவீர ரசிகரான ராஷ்மிகா அவருடன் வாரிசு படத்தின் தொடக்க பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம வைரலானது. இதனால் ரசிகர்கள் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக எப்படியிருப்பார் என இப்போதே எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ராஷ்மிகாவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது. ஆம், ராஷ்மிகா அவரின் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு இளமையான தந்தையா என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா..? இதோ பாருங்க