உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா..? இதோ பாருங்க
உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் தலைப்பு
திரைத்துறை, அரசியல் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி அரசியலில் களமிறங்கிய பிறகு, தான் நடிக்கும் படங்களில் மிகவும் பொறுப்புடன் இருக்கும் வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அப்படி, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு முன்னரே உதயநிதி, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவந்ததில்லை.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு 'கழக தலைவன்' என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் First லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri