காதலர் குடும்பத்துடன் ராஷ்மிகா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த படங்கள் பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது.
ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்கள் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன.
அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தன் காதலர் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதை மேடையில் மறைமுகமாக போட்டுடைத்து இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
வைரல் புகைப்படம்
இரண்டு நாட்களுக்கு முன் புஷ்பா 2 படம் வெளிவந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் தேவர்கொண்டா குடும்பத்துடன் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றுள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.