சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய ரத்ன குமார்.. காரணம் என்ன தெரியுமா?
ரத்னகுமார்
இயக்குனர் ரத்னகுமார் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், லியோ திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருக்கிறார்.
நேற்று லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் பேசிய ரத்னகுமார், "எவ்வளவு உயர பறந்தாலும், பசிச்சா கீழ இறங்கி வந்துதான் ஆகணும்" என்று பேசி இருந்தார்.
இது சூப்பர் ஸ்டார் ரஜினியைதான் மறைமுகமாக கிண்டல் செய்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் நடந்து வருகிறது.
காரணம் என்ன தெரியுமா?
இந்நிலையில் ரத்னகுமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில், நான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகபோகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரை ஆஃப் லைன் செல்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
Going offline for writing✍️. Taking a break from social media until my next film announcement.
— Rathna kumar (@MrRathna) November 2, 2023
See you soon ☺️?.