கேஜிஎப் 2 'ரமிகா சென்' நடிக்க வரும் முன் இந்த வேலை செய்தாரா! ஷாக் தகவல்
சமீபத்தில் வெளிவந்து இந்திய பாக்ஸ் ஆபிஸை திணறடித்து கொண்டிருக்கும் கேஜிஎப் 2 படத்தில் ரமிகா சென் என்ற ரோலில் நடித்து இருந்தார் ரவீனா டாண்டன். பாலிவுட்டில் பிரபல நடிகையான அவர் பிரதமர் ரோலில் கம்பீரமாக நடித்து இருந்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ரவீனா சமீபத்தில் அளித்த பெட்டியில் தான் நடிக்க வரும் முன்பு ஒரு ஸ்டுடியோவில் தரையை சுத்தம் செய்யும் பெண்ணாக பணியாற்றியது பற்றி கூறி இருக்கிறார்.
ஒரு பிரபல விளம்பர பட இயக்குனர் உடன் தான் அவர் பணியாற்றி இருக்கிறார். 10ம் வகுப்பு முடித்தபின் அங்கு வேலைக்கு சேர்ந்துவிட்டாராம். அங்கு தரையை துடைப்பது, பொருட்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்திருக்கிறார். சில நேரங்களில் யாரோ எடுத்த வாந்தியை கூட இவர் சுத்தம் செய்திருக்கிறாராம்.

எப்போதாவது விளம்பர படத்திற்கு மாடல் வராமல் போய்விட்டால் உடனே ரவீனாவை மேக்கப் போட வைத்து போஸ் கொடுக்க சொல்வாராம் அந்த இயக்குனர். அப்படியே பல முறை நடந்து இருக்கிறது.
இவருக்கு ஏன் இதை பணம் வாங்காமல் சும்மா செய்து கொடுக்க வேண்டும், மற்ற இயக்குனர்களிடம் பணியாற்றலாமே என அப்படியே மாடலிங் பணியையே ரவீனா துவங்கி இருக்கிறார். அதன் பின் தான் படிப்படியாக அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்து 1991ல் Patthar Ke Phool என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
தற்போது கேஜிஎப் 2 படத்தில் அவரது ரோல் பெரிய அளவில் பேசப்படுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவீனா டாண்டன்.
