சிங்கிளாக ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகர் ரவி மோகன்.. எங்கு தெரியுமா?
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது என பிஸியாக வலம் வந்தவர் நடிகர் ரவி மோகன். கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது.
தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோகோடு (Brocode) என்ற படத்தை தயாரித்துள்ளார்.

எங்கு தெரியுமா?
இந்நிலையில், நடிகர் ரவி மோகன், புதன்கிழமை கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மகாகாலேஷ்வர் கோவிலில் புனிதமான பஸ்ம ஆரத்தியில் கலந்துகொண்டார்.
பிரார்த்தனை செய்த பின் தனது மகிழ்ச்சியை ரவி மோகன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், "கோவிலில் பஸ்ம ஆரத்தியில் கலந்துகொண்ட பிறகு ஆற்றலுடன் உணர்கிறேன். மகாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு அழகான ஆன்மீக இடம். இங்கு கடவுளைக் காண ஏராளமான மக்கள் வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
