வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
ரவீந்தர் சந்திரசேகர்
நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரிதது பிரபலமானவர் தான் தயரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.
இவர் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
ரவீந்தர் சந்திரசேகர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்களை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார்.
தற்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரைக்கும் ரவீந்தர் சந்திரசேகர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
