திருமணமான 2 மாதங்களில் ரவீந்தர் செய்த விஷயம்.. குவியும் வாழ்த்து
ரவீந்தர் - மஹாலக்ஷ்மி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ஆகியோர் காதல் திருமணம் செய்த போது அது இந்திய அளவில் பேசப்படும் விஷயம் ஆனது. அவர்களது திருமண போட்டோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.
பணத்திற்காக மட்டும் தான் ரவீந்தரை நடிகை திருமணம் செய்திருக்கிறார் என விமர்சனங்களும் வந்தன. அதற்கு அவர்களும் பேட்டி கொடுத்து விளக்கம் அளித்தனர். மகாலட்சுமியும் ஆடி கார் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய ஆள் தான் என ரவீந்தர் விளக்கம் கொடுத்து இருந்தார்.
புது கார்
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது ஒரு புது சொகுசு காரை ரவீந்தர் - மஹாலக்ஷ்மி ஜோடி வாங்கி இருக்கிறார்கள்.
"வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா... New wife, new life,new car..drive easy and be crazy" என ரவீந்தர் கார் உடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த சித்தார்த்?