பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் அனைவரையும் வச்சு செய்த ரவீந்தர்.. வீடியோ இதோ
பிக் பாஸ் ரவீந்தர்
பிக் பாஸ் 8ல் நேற்று முதல் Eviction நடந்தது. இதில் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு நான் மகிழ்ச்சியாக தான் செல்கிறேன் என நகைச்சுவையாகவும் விஜய் சேதுபதியுடன் ரவீந்தர் கூறினார். பின் மற்ற போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் வகையில் ஒவ்வொருக்கும் தன்னுடைய விமர்சனங்களை எடுத்து வைத்தார்.
வச்சு செய்த ரவீந்தர்
அதில் அவர் முதலில் வைத்த விமர்சனம் அர்னவ்விற்கு தான். ஆம்,' அர்னவ் ஒரு Fake நபர்' என கூறிவிட்டார். அதன்பின் தீபக் குறித்து கூறிய விமர்சனத்தில், 'எப்போதுமே எதிரியை முன்னாடி அடிக்க வேண்டும், மூக்குக்கு பின் அடித்துவிட்டு பேசக்கூடாது' என கூறினார்.
ஜெஃப்ரி இடம் 'வாய் மற்றும் வார்த்தையை கவனமாக பயன்படுத்தவேண்டும்' என கூறினார். முத்துக்குமரனிடம் 'உனக்கு இந்த தளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என நல்லாவே தெரியும், நான் நம்புற ஆட்களில் நீயும் ஒருவர்'.
சுனிதா 'நிச்சயம் தமிழ்நாடு உன்னை கொண்டாடும்' என தெரிவித்தார். இப்படி வீட்டிற்குள் இருந்த 17 போட்டியாளர்களுக்கும் தனது விமர்சனத்தை தெரிவித்தார் ரவீந்தர்.

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
