சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட ரவீந்தர்- செம வைரல்
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சின்னத்திரை நடிகையின் திருமணம் இவ்வளவு பரபரப்பாக பெரிய அளவில் பேசப்படவில்லை. அப்படி முன்னணி நடிகை நயன்தாரா திருமணத்தை விட ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது ரவீந்தர்-மகாலட்சுமி மறுமணம் தான்.
இது இவர்கள் இருவருக்குமே மறுமணம் என்றாலும் ரசிகர்களால் மட்டும் முதலில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.
புதிய புகைப்படம்
திருமணம் செய்துகொண்ட இருவரும் ஏதாவது புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி அண்மையில் ரவீந்தர் மகாலட்சுமியுடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள். அதோடு சிலர் உருவத்தை பார்க்காமல் மனதை பார்த்து திருமணம் செய்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறார்கள்.
ரோஜா சீரியல் நாயகன் சிப்புவின் எமோஷ்னல் பதிவு- வருத்தப்படும் ரசிகர்கள்