RCB ஜெர்சியால் ஜெயிலர் படத்துக்கு வந்த சிக்கல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. நெல்சனின் முந்தைய படம் பீஸ்ட் அதிகம் ட்ரோல்களை சந்தித்த நிலையில் அதற்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக நெல்சன் தற்போது ஜெயிலர் மூலம் பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் தற்போது ஜெயிலர் படத்தின் ஒரு கட்சியில் ராயர் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பு
RCB ஜெர்சி அணிந்த நபர் ஒருவர் பெண்களை தகாத வகையில் பேசுவது போல காட்சி இருக்கிறது. இப்படி அனுமதி இல்லாமல் ஜெர்சியை பயன்படுத்தி, நெகடிவ் காட்சியின் மூலம் RCB பிராண்டுக்கு இருக்கும் மதிப்பு குறையும் வகையில் செய்திருக்கின்றனர் என அந்த நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயிலர் படத்தில் இருக்கும் அந்த காட்சியை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய ஒப்புக்கொள்வதாக கூறினார். அதற்கு RCB தரப்பும் ஒப்புக்கொண்டதால் வழக்கு முடித்துவைக்கபட்டது.
வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்களில் ஜெயிலர் படத்தில் இந்த மாற்றம் இருக்கும். மேலும் டிவி, ஓடிடியில் வெளியாகும்போதும் அந்த காட்சி மாற்றப்பட்டு இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அது உண்மைனு நம்பிடீங்களா.. ட்விஸ்ட் வைத்த நடிகை குஷ்பு