உண்மையான பொங்கல் வின்னர் துணிவா? வாரிசா?.. பல மாதங்களுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்
இந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருப்பவர்கள் அஜித், விஜய். விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அமைந்தது.
இந்த இரண்டு படங்களில் உண்மையான பொங்கல் வின்னர் யார் என்று கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.
வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், உண்மையில் கேரளா, கல்ப் போன்ற சில இடங்களில் விஜய்யின் வாரிசு படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாம். இதனால் துணிவு படம் தான் உண்மையான பொங்கல் வின்னர் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் தற்போது கமல் ஹாசன் படத்தை இயக்கி வருகிறார். ஆனால் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய வம்சி எந்த லைன் அப் இல்லாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதே போல கடந்த 2014 -ம் ஆண்டு ஒரே தினத்தில் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் திரைப்படம் வெளியானது. வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா பல படங்களை இயக்கி வருகிறார். ஆனால் ஜில்லா படத்தை இயக்கிய ஆர்.டி நேசனுக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையான பொங்கல் துணிவா? வாரிசா?.. பல மாதங்களுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri