விக்ரம் படத்தில் உண்மையான Rolex சூர்யா இல்லை.. அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல்
கமல் ஹாசனின் விக்ரம்
சமீபத்தில் வெளிவந்த உலகளவில் மாபெரும் வெற்றியையே அடைந்துள்ள திரைப்படம் கமல் ஹாசனின் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 5 நிமிடம் மட்டுமே வந்தாலும் கூட திரையரங்கை அதிரவைத்துவிட்டார் சூர்யா.
இதை கமல் ஹாசனை கூறியிருந்தார். விக்ரம் படத்தில் Rolex எனும் கதாபாத்திரத்தில் வந்திருந்த சூர்யா தனது நடிப்பினால் அனைவரையும் மிரள வைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விக்ரம் படத்தில் உண்மையான Rolex சூர்யா இல்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான Rolex யார்?
ஆம், விக்ரம் படத்தில் Rolex என்பவரை பார்த்த ஒரே நபர் சந்தனம் { விஜய் சேதுபதி } மட்டும் தான். ஆனால், படத்தின் முடிவில் விஜய் சேதுபதியும் இறந்துவிடுகிறார். அதனால், அங்கிருக்கும் அனைவரும் Rolex என்பவரை அப்போது தான் முதன் முதலில் பார்க்கிறார்கள். அதே போல் இறுதி காட்சியில் கமல் ஹாசன் சிறிது சிரித்தபடி Rolex-ஐ பார்த்துவிட்டு திரும்பி நடந்து செல்வார். இதனால், விக்ரமின் மற்றொரு Agent-டாக இருக்கும் சூர்யா தான், Rolex-ஆக நடித்து போதை பொருள் கும்பலையும் உண்மையான போதை பொருள் கும்பல் தலைவன் Rolex-யும் பிடிக்க வந்துள்ளார் என்பது போல் தற்போது கூறப்பட்டு வருகிறது.