அஜித் மற்றும் முக்கிய நடிகர் இடையே நடந்த சமீபத்திய சந்திப்பு ! என்ன காரணம் தெரியுமா?
எதிர்பார்ப்பில் AK 61
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK 61-ல் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது.
ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
சமீபத்திய சந்திப்பு
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகரான ஆதி அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.
அது AK 61 படத்தின் கூட்டணியாக இருக்குமோ என ரசிகர்கள் பேசிவந்தனர். ஆனால் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள ஆதி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆதி நடிகர் அஜித்தை தனது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைக்க சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பமான சீரியல் நடிகை ஸ்ரேயா, வைரலாகும் வீடியோ- ஆனால்?

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
