AK 62 அறிவிப்பு ஏன் இன்னும் வரவில்லை? இது தான் காரணமாம்
அஜித்62
அஜித்தின் AK 62 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் எப்போது வெளியிடும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
முதலில் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க இருந்த நிலையில் கதையில் மாற்றம் செய்வது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அதனை தொடர்ந்து மகிழ் திருமேனி தான் AK 62 படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அறிவிப்பு எப்போது?
வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக AK 62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கதையை இறுதி செய்யும் பணிகளில் மகிழ் திருமேனி தற்போது பிஸியாக ஈடுபட்டு வருகிறாராம். முன்பு ஏற்பட்டது போல மீண்டும் ஆகிவிட கூடாது என்பதால் லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பை வெளியிட அவசரம் காட்டவில்லை என சினிமா வட்டாரத்தினர் கூறி இருக்கின்றனர்.

ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ