விஜய்யை அப்படி சொன்னதுக்கு இது தான் காரணம் ! - கமல்
கமல் - விஜய்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி வெளியான விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் மிக பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை வெற்றியடைந்துள்ளது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள அப்படத்தை கோலிவுட் திரையுலகமே கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் படம் வெற்றியடைந்த கொண்டாட்டத்தில் கமல் இயக்குனர் லோகேஷிற்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாவிற்கு ரொலக்ஸ் வாட்ச் உள்ளிட்ட விஷயங்களை பரிசாக அளித்து வந்தார்.
இதனிடையே தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரஸ் மீட்டில் கலந்து கொண்டுள்ளார் கமல். அப்போது விஜய்யை ஐயா என அழைத்ததன் காரணத்தை சொல்லியியுள்ளார் கமல்.
அவர் கூறியதாவது "சிவாஜி சார் எப்படி என்னை கமல் ஐயா என அழைத்தாரோ, அதேபோல் தான் தற்போது விஜய்யை தளபதி ஐயா என அழைத்தேன். நேரம் வந்தால் நான் கண்டிப்பாக விஜய்யின் திரைப்படத்தை வெளியிடுவேன்" என பேசியுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விருந்தின் மெனு ! இத்தனை வகைகளா?