பிரதீப் அப்பா அம்மாவை பற்றிய கிண்டலாக பேசிய விஜய்.. கடுப்பாகி கமல் செய்த விஷயம்..
பிக் பாஸ் 7
பிக் பாஸ் சீசன் 7ல் முதல் வாரம் இறுதியில் கமல் ஹாசன் என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பலவிதமான விஷயங்கள் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் எபிசோடில் விஜய்க்கு கமல் ஹாசன் வார்னிங் கொடுத்துள்ளார். இதே போல் தொடர்ந்து வார்னிங் வாங்கினால் வீட்டை விட்டு கிளம்ப வேண்டியது தான் என்றும் கூறியிருந்தார்.
காரணம் கூறிய கமல்
இந்நிலையில், இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த வார்னிங் கொடுக்கப்பட்டதற்கான காரணம் ஒருவருடைய சோகத்தை விஜய்யுடன் இணைந்து சிலர் கிண்டல் செய்து பேசினீர்கள்.
அதற்காக தான் இந்த வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. அது யார் என்று நான் சொல்லமாட்டேன் என கூறியிருந்தார். பிரதீப் அப்பா அம்மாவின் மரணத்தை கிண்டல் செய்ததை தான் கமல் சுட்டிக்காட்டியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
#Day7 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 8, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/oBOAM0wJ6U