கோடிக்கணக்கில் விலை கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தை வாங்கிய அமேசான் பிரைம்!
கோடிக்கணக்கில் விலைக்கு போன பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் பிரமாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றுகூடி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா அளவில் ஹிட் கொடுத்து வருவதால், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள PS-1 திரைப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ள PS 1 மற்றும் PS 2 திரைப்படங்களை அமேசான் பிரைம் நிறுவனம் post-theatrical streaming உரிமத்தை ரூ.125 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.

மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்திய இயக்குனர் ஷங்கர் ! அதிர்ச்சி தகவல்..