மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்திய இயக்குனர் ஷங்கர் ! அதிர்ச்சி தகவல்..
தள்ளிப்போன திருமண வரவேற்பு
இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உண்டு, மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் தொழிலதிபர் தாமோதன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.
ஐஸ்வர்யா - ரோஹித்து திருமணம் பெரியளவில் செட் அமைத்து நடைபெற்றது, கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பத்திரிகையை சினிமாவின் பிரபலங்களுக்கு அளித்து வந்தார் ஷங்கர். மேலும் அந்த நிகழ்ச்சி 6 கோடிளவிலான செட் அமைப்புடன் பிரம்மாண்டமாக மே 1 ஆம் நடக்கவிருந்தது.
மேலும் தற்போது ஷங்கர் அனைவருக்கும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளதாக மெசேஜ் செய்துள்ளாராம். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..? இயக்குனர் விக்னேஷ் சிவனின் அதிரடி பதில்