வாரிசு மூன்று முக்கிய ஏரியாக்களை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்! முழு விவரம்
வாரிசு
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் ரிலீஸ் தேதியும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால் தற்போது பல உறுதிப்படுத்தாத தகவல்கள் உலா வருகின்றன.
துணிவு ஜனவரி 12 ரிலீஸ் ஆனால், வாரிசு ஜனவரி 11ம் தேதி அல்லது 13ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என பிரபலம் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து இருக்கிறார். .
மேலும் இரண்டு படங்களுக்கும் சம அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார். நன்றாக இருக்கும் படம் தான் நல்ல வசூல் ஈட்ட போகிறது, ரிலீஸ் முன்னரா பின்னரா என்பது பிரச்சனை இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முக்கிய ஏரியாக்களை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்
ஏற்கனவே அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை மூன்று முக்கிய ஏரியாக்களில் உதயநிதி வாங்கி இருக்கிறாராம். சிட்டி, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் செய்கிறது என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- சூப்பர் புகைப்படம்

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
