கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. ரீமா சென் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை ரீமா சென் தனக்கு திருமணம் ஆகி 10 வருடம் நிறைவடைந்து இருப்பதாக நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
ரீமா சென்
கோலிவுட்டில் ஒருகாலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர் ரீமா சென். கிளாமர், நடிப்பு என 90ஸ் கிட்ஸை அதிகம் ஈர்த்த நடிகைகளில் அவரும் ஒருவர். மின்னலே, பகவதி, தூள், செல்லமே, வல்லவன் என அவரது படங்கள் எல்லாமே கோலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள்.
அதன் பிறகு 2012ல் ரீமா சென் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இன்று மாலை நிச்சயதார்த்தம்! Exclusive தகவல்
10வது திருமண நாள்
ரீமா சென் தனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆனது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். "A decade of US❤️ Happppyyy 10th anniversary MY EVERYTHING" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.