எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்.. மறைந்த நடிகர் மாரிமுத்து இடத்தை பிடிப்பாரா
மாரிமுத்து
இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து.
இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று மாலை மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த காலை 10 மணிக்கு மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்யப்படவுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மரணமடைந்தால், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது.
அவருக்கு பதில் இவரா
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை. நடிகர் வேல ராமமூர்த்தி வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர், மேலும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
