மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்த நடிகை ரேஷ்மா- என்ன தொடர் யாருடன் நடிக்கிறார்?
ஜீ தமிழ் சின்ன சின்ன தொடர்கள் மூலம் இப்போது கொஞ்சம் ரீச் ஆகியுள்ளது. இதில் செம்பருத்தி, பூவே பூச்சூடவா போன்ற தொடர்கள் எல்லாம் செம ஹிட்டாக ஓடி இருக்கிறது.
பழைய தொடர்களை தாண்டி பேரன்பு, அமுதாவும்...., ரஜினி, நித்யா நம்பர் 1 என புத்தம் புது தொடர்கள் எல்லாம் ஒளிபரப்பாகி வருகிறது.
எல்லாமே இளைஞர்களை கவரும் வண்ணம் இளம் நாயகிகளை வைத்து ஓடிக் கொண்டிருக்கும் தொடர்கள்.
மீண்டும் ஜீ தமிழ் வரும் நாயகி
பூவே பூச்சூடவா தொடரின் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரேஷ்மா. இவர் மதன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டு இருவரும் கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற தொடரில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் ரேஷ்மா மீண்டும் ஜீ தமிழ் பக்கம் வருகிறார் என்கின்றனர். ஆனால் என்ன தொடர், யார் நாயகன் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.