ரசிகர் கேட்ட அந்த ஒரு கேள்வி: கடும் கோபமான சீரியல் நடிகை ரேஷ்மா
ரேஷ்மா - மதன் பாண்டியன் திருமணம்
ஜீ தமிழில் பூவே பூச்சூடவா தொடரில் ஒன்றாக நடிக்கும்போது காதலில் விழுந்த நடிகை ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் இருவரும் கடந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்கள் திருமணத்தில் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ரசிகர் கேட்ட கேள்வி.. டென்சன் ஆன ரேஷ்மா
ரேஷ்மா இன்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கைவசம் தற்போது எந்த ப்ரொஜெக்ட்டும் இல்லை என கூறிய அவர், வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வியால் ரேஷ்மா கோபமானார். 'யப்பா.. இல்லப்பா. எத்தனை பேரு தான் கிளம்பிருக்கீங்க' என பதில் அளித்த ரேஷ்மா, அந்த நபர் pregnant என்ற வார்த்தையையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து இருப்பதை குறிப்பிட்டு கலாய்த்து இருக்கிறார்.
Also Read: உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன வரலக்ஷ்மி சரத்குமார்.. வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ