புதிய தொழிலை தொடங்கியுள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி... குவிந்த பிரபலங்கள், வீடியோ இதோ
ரேஷ்மா பசுபுலேட்டி
ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அதன்பின் சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர் பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் பக்கம் சென்று கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் விஜய் டிவியிலும் மகளே என் மருமகளே என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

புதிய தொழில்
சீரியல்கள் நடிப்பது, கடை திறப்பு விழா செல்வது, போட்டோ ஷுட் என செம பிஸியாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது புதிய சலூன் திறந்துள்ளார்.

Page3Salon என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையின் திறப்பு விழாவிற்கு பிரபலங்கள் பலரும் வந்துள்ளனர். இதோ வீடியோ,