சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.
ரியோ ராஜ்
இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.
இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த இவர், முதன் முதலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களை விட மக்களிடம் இருந்து மாபெரும் வெற்றியை ஜோ திரைப்படம் பெற்று தந்துவிட்டது.
ஜோ திரைப்படம்
ஆம், கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று ஜோ. மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜோ திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
[D7PXL2 ]
இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரியோ மிகவும் உருக்கமான விஷயத்தை மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்.
இதில் 'இந்த படம் ஆரம்பிக்கும் போது சிலர் தடுத்தார்கள். தயாரிப்பாளரிடம் இந்த படம் பண்ண வேண்டாம் என கூறினார்கள். ஆனால், அவருக்கு கதை பிடித்துப்போனது, அதனால் தான் ஜோ என்கிற திரைப்படம் உருவானது. ஒரு குழு உருவாகி தங்களது கனவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும்போது, அதை போய் தடுப்பது என்பது எந்த அளவிற்கு சரி என தெரியவில்லை. அப்படி செய்யாதீர்கள்' என பேசினார்.
ஆனால், ஜோ படத்தை உருவாக்க விடமால் தடுத்தது யார் என்று நடிகர் ரியோ ராஜ் குறிப்பிடவில்லை.

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
