ராம்ராஜ் நிறுவனத்தின் முகமாக மாறிய காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி

By Parthiban.A Jan 26, 2024 11:40 AM GMT
Report

ராம்ராஜ் வேட்டி, சட்டை ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் புது பிராண்ட் அம்பாஸடர் ஆக நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வாகி இருக்கிறார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.அருண் ஈஸ்வர் இது குறித்து பேசும்போது "பாரம்பரிய இந்திய வேட்டியை அணியும் சில இந்திய நடிகர்களில் இவரும் ஒருவர்."

"ரிஷப் வெட்டி ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர் என்பதைத் தாண்டி, ஓர் எளிமையான மனிதர். அவரது பாரம்பரிய வேர்களுடன் மிகவும் நெருக்கமானவர்."

"ரிஷப் உடன் இணைவது எங்களுக்கு அதிகம் மகிழ்ச்சி. இது எங்கள் பிராண்டை இன்னும் அதிக உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்"

 ராம்ராஜ் நிறுவனத்தின் முகமாக மாறிய காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி | Rishab Shetty As Ramraj Cotton Brand Ambassador

ராம்ராஜ் நிறுவனம் தற்போது தென்னிந்தியாவை தாண்டி வட இந்தியாவிலும் தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தி வருவதால் ரிஷப் ஷெட்டி இணைந்து இருப்பது மகிழ்ச்சி எனவும் கூறி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US