எவ்ளோ பணம் கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்கவே மாட்டேன்!.. காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி ஓபன் டாக்
ரிஷப் ஷெட்டி
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான காந்தார என்ற படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் ரிஷப் ஷெட்டி.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட சாதனையை படைத்தது.
நடிக்கவே மாட்டேன்
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எனக்கு பிற மொழிகளில் இருந்து வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது.
அதுவும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தன. ஆனால் அதை நான் நிராகரித்துவிட்டேன். நான் கன்னடத்தில் மட்டும் தான் திரைப்படம் பண்ணுவேன்.
கன்னட சினிமா ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
