கல்யாணம் பண்ணி வெச்சது இதுக்கு தானா? பாக்யா மீது அமிர்தா சொன்ன புகார்
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது எழில் - அமிர்தா திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. மறுபுறம் வீட்டை காலி செய்ய சொல்லும் கோபியை எப்படி சமாளிக்க போகிறோம் என இருக்கிறார் பாக்யா.
அந்த நேரத்தில் தாத்தா அவரது மொத்த சொத்தையும் எழுதி கொடுத்து விடுவதாக கூறி, அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்துவிடும்படி கேட்கிறார். கோபியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
பாக்யா மீது அமிர்தா சொன்ன புகார்
அடுத்து வரும் நாட்களில் பாக்யா மற்றும் அமிர்தா இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்வது போல காட்சிகள் வருகிறது. அதன் ஷூட்டிங்கில் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரித்திகா.
'என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார்' என காமெடியாக பாக்யா மீது புகார் கூறி இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ..
நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு, பிரம்மாண்ட வீடு மற்றும் பயன்படுத்தும் கார்.. முழு விவரம் இதோ