தொடர் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய RJ பாலாஜி.. எத்தனை கோடி தெரியுமா?
ஆர்.ஜே பாலாஜி
ஆரம்பத்தில் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் ஆர்.ஜே பாலாஜி.
இவர் "நானும் ரவுடி தான்" படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து பேசும் காமெடி வசனங்கள் பிரபலமானது. இதனால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆர்.ஜே பாலாஜி, 2017 -ம் ஆண்டு வெளியான 'LKG' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததனால் இதன் பின்னர் மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் என்ற படங்களில் நடித்திருந்தார்.

சம்பளம்
சமீபத்தில் இவர் நடிப்பில் "ரன் பேபி ரன்" திரைப்படம் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் "ரன் பேபி ரன்" படத்திற்காக ஆர்.ஜே பாலாஜி 4 கோடி சம்பளம் வாங்கினாராம். இதையடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் சம்பளத்தை 7 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு.. நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத தொகை