மாபெரும் வெற்றியடைந்த அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா! சசிகுமார் இல்லையா
அயோத்தி
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்று அயோத்தி. அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் ப்ரீத்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனதை நெகிழ வைத்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. 2023ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் முக்கியமான படமாகவும் பார்க்கப்பட்டது.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சசிகுமார் இல்லையாம். இப்படத்தின் கதையை இயக்குனர் மந்திர மூர்த்தி, நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜியிடம் கூறியுள்ளார். ஆனால், ஏதோ காரணத்தால் இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த தகவலை ஆர்.ஜே. பாலாஜி தனது சொர்க்க வாசல் படத்தின் ப்ரோமோஷன் Interview-ல் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அயோத்தி படத்தை வேண்டாம் என கூறியதற்கு வருத்தப்படுத்தவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
