இந்த படத்தை ஏன் எடுத்தீங்க ? RJ பாலாஜி சொன்ன படம் இது தானா !

By Jeeva May 10, 2022 08:00 AM GMT
Report

RJ பாலாஜி சொன்ன விஷயம்  

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

Article 15 படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் சிவகார்த்திகேயன் மற்றும் RJ பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது RJ பாலாஜி இப்படம் குறித்தும் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

அப்போது அவர் "உதயநிதியை எனக்கு 12 வருஷமா தெரியும், அப்ப அவர் நடிக்க வரல தயாரிப்பாளரா இருந்தார். அப்ப பேசின ஒன்னு ஞாபகம் இருக்கு. சினிமாவை பத்தி நிறைய பேசினோம், அப்போ உதய், நீங்க இவ்வளோ சொல்லறீங்களே, ஏன் அந்த படம் தயாரிச்சீங்கனு ஒரு படத்தை பத்தி கேட்டேன்.

அவர் அப்போ என் தோள்-ல கைபோட்டு "எனக்கும் அந்த டவுட் இருந்துச்சீ, நானும் எடுத்தவர் கிட்ட போய் கேட்டேன் என்ன படம் சுமாரா இருக்குன்னு. அதற்கு அவர் இன்னொரு வாட்டி எடுக்கலாமான்னு கேட்டார், ஐயோ சார் அளவிடுங்கன்னு வந்துட்டேன்" என உதயநிதி சொன்னதாக RJ பாலாஜி பேசியிருந்தார்.


சலசலப்பை ஏற்படுத்திய நெட்டிசன்கள்

இந்நிலையில் தற்போது இணையதள வாசிகள் RJ பாலாஜி குறிப்பிட்ட அந்த திரைப்படம் குருவி அல்லது மன்மதன் அம்பு திரைப்படமாக தான் இருக்க முடியும் என கூறிவருகின்றனர். ஏன்னென்றால் ரெட் ஜெயண்ட் மோவிஸ் தயாரித்த திரைப்படங்களில் அப்போது அந்த திரைப்படங்கள் தான் சுமாராக ஓடியது என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

   இந்த படத்தை ஏன் எடுத்தீங்க ? RJ பாலாஜி சொன்ன படம் இது தானா ! | Rj Balaji Trolled This Movie

https://cineulagam.com/article/thalapathy-66-movie-vijay-look-1652164237

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US