மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விவேக்
தமிழ் சினிமாவில் சிரிப்புடன் சேர்த்து சிந்தனையையும் விதைத்தவர் நம் சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள்.
இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு நம் அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, விவேக்கின் வீடு இருக்கும் தெருவிற்கு அவரது பெயரை வைக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
விவேக் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட முதல்வர் அதற்கான அரசாணையை உத்தரவிட்டு உள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், விவேக் அவர்கள் வாழ்ந்த தெருவிற்கு ' சின்னக் கலைவாணர் விவேக் சாலை ' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்த விவேக் அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
