முதல் மனைவியை ஏன் பிரிந்தேன்? 'அங்கிள்' என அழைக்கும் சொந்த மகள்.. ராபர்ட் மாஸ்டர் கண்ணீர்

Parthiban.A
in தொலைக்காட்சிReport this article
பிக் பாஸில் தற்போது போட்டியாளர்கள் அவர்களது கண்ணீர் கதையை கூறி வருகிறார்கள். இன்று டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவரது கதையை சொல்லி இருக்கிறார்.
உடலில் பிரச்சனை
எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடைக்குட்டி நான் என்பதால் பெற்றோருக்கு என் மீது அதிகம் எதிர்பார்ப்பு. ஆனால் சின்ன வயதிலேயே எனக்கு போலியோ அட்டாக். கால் சரியாக வரவில்லை. அதன் பின் அப்பாவின் முயற்சியால் தான் அது சரியாகி, நடனத்திற்குள்ளேயே வந்தேன்.
அதன் பின் மற்றவர்களை போல எனக்கும் காதல் வந்தது. பெயரை சொல்ல விரும்பவில்லை. அவரை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பிறந்ததும் பிரிந்துவிட்டோம், அது ஏன் என எனக்கு தெரியவில்லை. எனக்கு knowledge இல்லை என அவர் கூறினார். நான் சுத்தமாக படிக்கவில்லை.
மகளை நினைத்து கண்ணீர்
என் மகளுக்கு நான் தான் அப்பா என தெரியுமா தெரியதா என்று கூட எனக்கு தெரியாது. என் முதல் மனைவியை இன்னொரு திருமணம் செய்துகொண்டார். ஆனால் என் மகளுக்கு நான் தான் அப்பா என நான் இறந்த பிறகாவது சொல்லுங்க.
"இந்த ஷோவை அவரும் பார்ப்பார், தெரிந்துகொள்வார் என்பதற்காக தான் நான் இந்த ஷோவுக்கே வந்தேன்."
இரண்டு வயது வரை குழந்தையை பார்த்திருக்கிறேன். அதன் பின் 7 வயதில் ஒருமுறை ஸ்கூட்டரில் கூட்டி வந்தார். என்னை பார்த்து 'அங்கிளுக்கு hi சொல்லு' என என் முதல் மனைவி சொல்ல, மகளும் என்னை அங்கிள் என கூறிவிட்டு போனார்.
அதெல்லாம் மிகப்பெரிய வலி என ராபர்ட் மாஸ்டர் கூறி இருக்கிறார்.
அசல் கோளாறு சொன்ன வார்த்தை, கோபத்தில் தனலட்சுமி செய்த விஷயம்- பிக்பாஸில் நடந்த பரபரப்பான வீடியோ

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
