பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த பிரபல டான்ஸ் மாஸ்டர்?
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்க நிகழ்ச்சி உடன் துவங்க இருக்கிறது. அதே மேடையில் விஜய் டக்கர் என்ற ஒரு புது டிவி சேனலையும் தொடங்க இருக்கிறார்கள். அந்த சேனலில், நிகழ்ச்சிகள் மட்டுமின்றி வித்தியாசமான சில புது புது ஷோக்களும் கொண்டு வரலாம் என தெரிகிறது.
இன்னொரு புறம் பிக் பாஸ் 6 வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
ராபர்ட் மாஸ்டர்
இந்நிலையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பிக் பாஸ் போட்டியாளராக வருகிறார் என தகவல் பரவி வருகிறது.
அவர் பிக் பாஸ் செல்லும் முன்பு quarantine ல் இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஹோட்டல் அறையில் அவர் தங்கி இருக்கும் போட்டோ தான் அது.
பிக் பாஸ் செல்லும் முன் இப்படி இருக்கும் போட்டோவை அவர் வெளியிட்டு இருப்பதால், அவர் பிக் பாஸ் செல்வது கிட்டத்தட்ட உறுதி என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
Also Read: ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாகும் முன்பே 100 கோடி அளவில் வியாபாரம்! விஜய், அஜித் நெருங்கும் சிவகார்த்திகேயன்