நான் கஷ்டத்தில் இருந்த போது தனுஷ் செய்த விஷயம்.. கண்கலங்கிய ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து, இன்று வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.
புகழின் உச்சத்தில் வலம் வந்த இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்தும் தொலைக்காட்சியில் இருந்தும் விலகி இருந்தார்.
தனுஷ் செய்தது
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு மனதளவிலும் சக மனிதராகவும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். கொரோனா காலகட்டத்தில் நானும் எனது குடும்பமும் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அப்போது எனக்கு பண ரீதியாக மிகப்பெரிய உதவியாக இருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
