நடிக்க வரவில்லை என்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர் ஓபன் டாக்
ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்தது. திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகள் பலரும் ரோபோ ஷங்கரின் உடலுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவருடைய நகைச்சுவை காட்சிகள் என்றுமே மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
ரோபோ ஷங்கர் ஓபன் டாக்
இந்த நிலையில், நடிகர் ரோபோ ஷங்கர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகி இருப்பேன் என்பது குறித்து அவர் கூறியுள்ளார்.
"நான் மட்டும் நடிகராக வில்லை என்றால், கண்டிப்பாக ஒரு பாடி பில்டராகி இருப்பேன். ஒரு தொகுப்பாளராக, மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகத்தான் வந்தேன். நடிக்க வரவில்லை என்றால், எதோ ஒரு டீக்கடையில் டீ ஆத்திக்கொண்டு இருப்பேன். இல்லை என்றால் ஏதாவது ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராகி இருப்பேன்" என ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.