நாளை வீட்டில் விசேஷம், அதற்குள் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்... சோகத்தின் உச்சத்தில் குடும்பத்தினர்
ரோபோ ஷங்கர்
ஸ்டாண்டப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர்.
சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்து வந்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால் அதற்குள் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
விசேஷம்
கடைசியாக சன் டிவியின் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஒரு புதிய படத்தின் பூஜையில் கூட கலந்துகொண்டிருக்கிறார். ரோபோ ஷங்கர் மறைவால் குடும்பத்தினர் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர்.
இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் மகனுக்கு நாளை (செப்டம்பர் 20) காதணி விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் வீட்டில் துக்கம் நடந்துள்ளது.