தொடர்ந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத KGF 2!
தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் ராக்கி பாய்
இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் KGF 2 -ஆக தான் இருக்க முடியும்.
அப்படி பிரமாண்டமாக வெளியான KGF 2 திரைப்படம் உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் எந்தளவிற்கு இப்படம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் படத்தை விட பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது KGF 2.
மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாகி வருகிறது, ஆனாலும் கூட KGF 2 திரைப்படம் ஹவுஸ் புல்-ஆக ஓடி வருகிறது.
அந்த வகையில் தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள KGF 2, தமிழ்நாட்டில் 350+ திரையரங்குகளில் ஓடி வருகிறதாம். இதனை தயாரிப்பாளர் SR பிரபுவே அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#kgfchapter2 Continues it’s successful run in third week with 350+ screens! #RockyBhai is still Unstoppable. Thanks to the wonderful audience for the continuous support ????. #KGF2 ???
— SR Prabhu (@prabhu_sr) April 29, 2022
காத்து வாக்குல ரெண்டு காதல் பட விமர்சனங்களுக்கு முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அளித்த பதில் !