இன்னும் சில காலம் அவருடன் இருந்திருக்கலாம் .. ரகுவரன் குறித்து முன்னாள் மனைவி உருக்கம்
ரகுவரன்
தனித்துவமான குரல் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். உடல்நிலை சரியில்லாததால் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக யாரடி நீ மோகினி படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.
ஸ்டைலான, வித்தியாசமான குரல் கொண்டு மக்களை கவர்ந்த ரகுவரன் என்ற வில்லனின் இடம் இப்போதும் காலியாகவே உள்ளது என்றே கூறலாம். அவர் அளவிற்கு யாரும் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெறவில்லை.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் நடிகர் ரஜினியோடு பாட்ஷா, மனிதன், சிவா உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ரோகிணி உருக்கம்
ஆனால், மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், நடிகை ரோகினி பேட்டி ஒன்றில் ரகுவரன் குறித்து பேசியுள்ளார்.
அதில், "நானும் ரகுவரனும் பிரிந்த பின்பும் நண்பர்களாக பேசி கொண்டு இருந்தோம். அவர் இறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன் அவருடன் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் இன்று வரை என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
