நடிகை ரோஜாவின் மகளுக்கு சினிமாவில் ஆசை இல்லையா?- பிரபலமே கூறிய தகவல்
நடிகை ரோஜா
90களில் தென்னிந்திய சினிமாவில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கலக்கிய ரோஜாவின் படங்கள் எப்போது நல்ல வரவேற்பை பெறும்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
குடும்பம், சினிமாவை தாண்டி நடிகை ரோஜா அரசியலில் ஈடுபட்டு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மகள் சினிமா எண்ட்ரீ
கடந்த சில மாதங்களாக நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் எண்ட்ரீ கொடுக்கப்போகிறார் என தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன, ஆனால் நடிகை தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
அண்மையில் திருப்பதி சென்ற நடிகை ரோஜாவிடம் அவரது மகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தனது மகனும் மகளும் திரையுலகில் நுழைந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று கூறிய ரோஜா தனது மகள் அன்ஷு மல்லிகா விஞ்ஞானி ஆக விரும்புவதாகவும், படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
மேலும் மகளுக்கு எப்போதும் தனது ஆதரவு இருக்கும் . தனது மகளுக்கு நடிப்புத் துறையில் நுழையும் எண்ணம் இல்லை என்று ரோஜா கூறியுள்ளார்.
IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?