'ரோஜா' பிரியங்கா நல்காரிக்கு திடீரென முடிந்த திருமணம்! பல பிரச்சனைகளுக்கு பின் கரம்பிடித்த ஜோடி
ரோஜா
சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது அவர் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா நல்காரிக்கு ரோஜா சீரியல் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.
திடீர் திருமணம்
இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி தனது காதலரை மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பல சிக்கல்களை தாண்டி இந்த திருமணம் நடந்து முடிந்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை தான் பிரியங்கா நல்காரி திருமணம் செய்து இருக்கிறார். ஏற்கனவே அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டதாக செய்தி பரவியது.
இந்நிலையில் திருமணம் திடீரென நடந்து முடிந்திருக்கிறது.
புகைப்படங்கள் இதோ..





போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
