ரோஜா சீரியல் ஹீரோயின் வீட்டில் விசேஷம்.. திருமண கோலத்தில் பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி
ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு நடிகையான அவர் இந்த சீரியல் மூலமாக தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.
ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது bridal மேக்அப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தங்கைக்கு திருமணம்
அந்த புகைப்படம் இன்று நடந்த அவரது தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது தான். தங்கை திருமணத்திற்கு ப்ரியங்காவும் மணப்பெண் போல அழகாக வந்திருக்கிறார்.
பிரியங்கா நல்காரி இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் தற்போது அவரது தங்கை திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் பிரியங்காவுக்கும் அவரது காதலருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது, ஆனால் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டதால் திருமணம் நடக்கவில்லை.
![Gallery](https://cdn.ibcstack.com/article/408182b3-0726-4eb7-8695-c3b5224a061a/22-6374991be4ca1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4e3583ad-1e33-4b22-a9b7-14ada8bb9c06/22-6374991c55f68.webp)