வேறு சேனலுக்கு செல்லும் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன்? உண்மை இதுதான்
ரோஜா சீரியல்
சன் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிகொண்டிருந்த ரோஜா சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. அந்த தொடரில் நடித்த சிபு சூர்யன் மற்றும் ப்ரியங்கா நல்காரி ஆகியோருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அடுத்து அவர்கள் எந்த சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். அதே ஜோடி மீண்டும் வந்தாலும் கொண்டாட்டம் தான் என கூறி வருகிறார்கள்.
ஜீ தமிழில் சிபு சூர்யன்?
இந்நிலையில் தற்போது சிபு சூர்யன் விரைவில் ஜீ தமிழின் புது சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என சிபு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் இதுவரை எந்த ப்ராஜெக்ட்டிலும் கமிட் ஆகவில்லை என தெரிவித்து இருக்கிறார். அடுத்த ப்ராஜெக்ட் என்ன என விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறிய ராம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?