21 வருடங்களுக்கு முன் ஒன்றாக நடித்துள்ள ரொலக்ஸ் மற்றும் ஏஜென்ட் டினா! வைரலாகும் புகைப்படம்

By Jeeva Jul 25, 2022 11:00 AM GMT
Report

Rolex - ஏஜென்ட் டினா

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.

தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்த நிலையில், அதனை முறியடித்து விக்ரம் திரைப்படம் No.1 திரைப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் இந்தளவிற்கு வரவேற்பை பெற முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள்.

அதன்படி படத்தின் கடைசி நிமிடங்களில் சூர்யா ரொலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து ஒட்டுமொத்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றார். மேலும் இப்படத்தில் ஆச்சரியமளிக்கும் படி ஏஜென்ட் டினா கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் நடன கலைஞர் வசந்தி.

மேலும் வசந்தி இதற்கு முன் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனமாடியுள்ளார். அப்படி அவர் முக்கிய நடிகர்களுடன் நடனமாடிய புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின.

மேலும் தற்போது ப்ரேண்ட்ஸ் திரைப்படத்தின் வசந்தி நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யுடன் நடனமாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை 21 வருடங்களுக்கும் முன் ரொலக்ஸ் மற்றும் ஏஜென்ட் டினா என பரப்பி வருக்கின்றனர்.

21 வருடங்களுக்கு முன் ஒன்றாக நடித்துள்ள ரொலக்ஸ் மற்றும் ஏஜென்ட் டினா! வைரலாகும் புகைப்படம் | Rolex And Agent Before 21 Years

வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US