சிறுவயதில் ரோலக்ஸ் மற்றும் டில்லி ! ரசிகர் இணையத்தில் பகிர்ந்த அன்சீன் புகைப்படம்
ரோலக்ஸ் - டில்லி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் சொந்த சகோதரர்களுமாக திகழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் மகன்களான இவர்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் தனித்தனியே தங்களின் திரைபயணத்தில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில், இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை.
ஆனால் தற்போது அதற்கு பெரிய வாய்ப்பு உருவாகி இருக்கிறது, அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தால் தனக்கென ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாகி இருக்கிறார்.
அதன்படி விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவையும், டில்லியாக கார்த்தியையும் காட்டியுள்ளார். இவர்களின் இருவரும் சேர்ந்து விக்ரம் 3 அல்லது கைதி 2-வில் காண்டிப்பாக காட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இதற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே தற்போது ரசிகர் ஒருவர் சூர்யா மற்றும் கார்த்தி சிறுவயது அன்சீன் புகைப்படத்தை பகிர்ந்து, ரோலக்ஸ் மற்றும் டில்லி என கேப்ஷன் போட்டுள்ளார். இதோ அந்த அன்சீன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.